டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலைமுதல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9-30 மணி அளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, பாஜக 127 இடங்களிலும், ஆம்ஆத்மி 113 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 1  இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

250 வார்டுகளை கொண்ட  டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. அங்கு மும்முனை போட்டி நிலவியது. தேர்தலின்போது ஏறக்குறைய 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்ததுரு. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 

டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆம் ஆத்மி 124 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 120 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.