அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய டெல்லி போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த நவம்பர் 26ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மத்திய விமான போக்குவரத்து துறை விசாரனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் 70 வயதைக் கடந்த பெண் பயனி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த நபர் குறித்த விவரம் தெரியவந்துள்ளது.

வெல்ஸ் ஃபார்கோ என்ற அமெரிக்க நிதி மற்றும் வங்கித்துறை நிறுவனத்தின் இந்திய துணை தலைவராக இருக்கும் சங்கர் மிஸ்ரா தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

குடிபோதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது பெண்ணை அபாசமாக பேசியது பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டது ஆகிய குற்றங்களுக்காக நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் வசிக்கும் சங்கர் மிஸ்ரா இதுவரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவரும் நிலையில் அவரை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.