டில்லி,

திமுக இரணடாக பிளவுபட்டதை தொடர்ந்து தேர்தல் கமிஷன் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்துள்ளது.

இதுகுறித்த விசாரணை இன்று நடைபெற இருக்கிற நிலையில், இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு (அதிமுக அம்மா – சசிகலா அணி) ஒதுக்க இடைத்தரகர்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் இன்று (ஏப்ரல் 17) விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சசி அணியை சேர்ந்த டிடிவி தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை சந்தேகத்தின் பேரில் டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் இருந்து ரூ.1.5 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக லஞ்சம் பெற்ற இடைத்தரகர் சதீஷ் சந்திரா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் இருந்து 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தேர்தல் கமிஷனுக்கு, டிடிவி தினகரன் பேரில்,  இரட்டை இலை சின்னத்தை மீண்டும் சசிகலா அணிக்கு ஒதுக்க லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.