புவனேஸ்வர்,

ரிசா மாநிலம் புவனேஸ்வரில் பாரதியஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

நேற்றைய இறுதி நாள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முத்தலாக் குறித்து தனது கருத்தை பதிவு செய்தார்.

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் ‘முத்தலாக்’ நடைமுறைகளுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்துவருகிறது. இந்த வழக்குக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும், முஸ்லீம் சகோதரிகளை  அநீதியில் இருந்து  பாதுகாக்க,  முஸ்லீம் மக்களில் பின்தங்கிய சமூகத்தினரை அரசின் நலத்திட்டங்கள்  சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும்,  தேர்தல் தோல்விகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. இது தவறு என்று கூறினார்.

பாரதியஜனதா கட்சியினர்,.  வெற்றிகளில் ஓய்வு எடுக்காமல் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் என்றும்,  சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசாமல் அமைதியாக இருக்கும் கலையையும் பாஜக தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

‘இவ்வாறு அவர் பேசினார்.