டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டிருந்த வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இரவு ஊரடங்கு,  பள்ளிகள் மூடல் தொடரும் என அறிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் தினசரி கொரோனா பரவல், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,384 பேர் அதிகரித்து மொத்தம் 4,03,71,500 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில், நேற்று (26ந்தேதி) 7,498 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பு 10ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளதால்,  அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில முதல்வர் கெஜ்ரிவால், கவர்னர் தமிழிசைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, இன்று டெல்லி மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நடந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்துடெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   இனி வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இரவு ஊரடங்கு நீடிக்கும் என்றும், பார்கள், உணவகங்கள், திரையரங்குகள் 50% திறனுடன் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றுதெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பள்ளிகள் திறப்பு தொடர்பாக அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.