டெல்லி: மதுபான கொள்கை  முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வரான ஆத்ஆத்மி கட்சியைச்சேர்ந்த  மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து உள்ளது.

டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில், ஆம்ஆத்தி கட்சியைச் சேர்நத் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு, அமலாக்கதுறையால் (ED) மார்ச் 9-ம் தேதி டெல்லி திகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. அவர் தற்போது சிறையில் உள்ளார். மேலும், இந்த வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் சிக்கியுள்ளார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதுதொடர்பான விசாரணையில், டெல்லி ஆம்ஆத்மி அரசு  கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் தனியாருக்கு மதுபான கடைகள் ஒதுக்கியபோது,   ஏராளமான மதுபான கடைகள். இன்டோஸ்பிரிட் டிஸ்ட்ரிபியூசன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. இந்த நிறுவனத் தின் 65 சதவீத பங்குகள் சவுத் குரூப் நிறுவனத்திடம் உள்ளன. அதாவது சவுத் குரூப் நிறுவனத்தை சேர்ந்த அருண் பிள்ளைக்கு இன்டோஸ்பிரிட் நிறு வனத்தில் 32.5 சதவீத பங்குகளும், பிரேம் ராகுலிடம் 32.5 சதவீத பங்குகளும் உள்ளன. இந்த  நிறுவனங்கள், தெலுங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகராவின் மகளான கவிதாவின் பினாமிகள் என்பது தெரிய வந்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவின் ஆடிட்டர் புச்சி பாபு மற்றும் ராமச்சந்திர பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 19, 20-ம் தேதிகளில் மணீஷ் சிசோடியாவின் பிரதிநிதி விஜய் நாயர், கவிதாவை சந்தித்துப் பேசியுள்ளார். இதை ஆடிட்டர் புச்சி பாபு உறுதி செய்திருக்கிறார்.

கவிதாவின் பினாமி நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்க, ஆம் ஆத்மி தலைவர்களுக்கு சவுத் குரூப் சார்பில் ரூ.100 கோடி லஞ்சம் வழங்கப் பட்ட‘தாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்காக  பயன்படுத்தியது என சிபி குற்றம் சாட்டி உள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா கடந்த 8 மாதங்களுக்கு மேலாக டெல்லி திகார்  சிறையில் உள்ளார். இவர் ஜாமின் கோரி கீழமை நீதிமன்றம் முதல் டெல்லி உயர்நீதிமன்றம் வரை தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி சஞ்சீவ் கண்ணா  எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன்,  மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறையில் மனிஷ் சிசோடியா உள்ளார். மணீஷ் சோசோடியா மீதான வழக்கை 6 மாதத்தில் இருந்து 8 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க  வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

மேலும், சிபிஐ, அமலாக்கத்துறைகளின்   விசாரணை மந்தமாக நடந்தால் மணீஷ் சிசோடியா மீண்டும்  ஜாமின் கோரி 3 மாதத்துக்குள் மனு தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.