பெங்களூரு வீரபத்திர நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 தனியார் பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

பேருந்துகளுக்கு பாடி பில்டிங் தொழிற்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களுக்கு பரவியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தீயினால் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் வரிசையாக தீப்பிடித்து எரிந்தது.

40க்கும் மேற்பட்ட பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இவை அனைத்தும் தீயில் கருகி நாசமானதாகவும் கூறப்படுகிறது.

தீயை அடுத்து தொழிற்கூடத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.