தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சித்திபெட் மாவட்டத்தில் உள்ள டுப்பக்கா சட்டமன்ற தொகுதி வேட்பாளராக உள்ள பிரபாகர ரெட்டி, சூரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரபாகர் ரெட்டியை வயிற்றில் கத்தியால் குத்தினார்.

இதனையடுத்து பிரபாகர் ரெட்டி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்திய நபரை பிடித்த அந்த கிராம மக்கள் மற்றும் கட்சியினர் அவரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த பிரபாகர் ரெட்டி தற்போது மேடக் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.