சென்னை,
முதல்வர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் வேளையில் அதிமுக எம்எல்ஏக்களை வட்டமிடுகிறது டெல்லி கழுகுகள்.
தற்போதைய சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை தன்வசப்படுத்தி, தமிழ்நாட்டில் தங்களது கட்சியை பலப்படுத்தலாம் என பாரதியஜனதாவும், தங்கள் பக்கம் இழுத்து, தமது கட்சியை மேலும் பலப்படுத்தலாம் என காங்கிரஸ் தலைமையும், கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை தன் வசப்படுத்தினால் ஆட்சி அமைக்கலாம் என திமுகவும் வட்டமிட்டு வருகிறது.
அதற்கு தகுந்தாற்போல, ஏற்கனவே  அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.
appllojeya480
மற்றும் பாரதியஜனதா  கட்சி தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் அப்பல்லோ வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பாவை தன் வசப்படுத்தி, எம்எல்ஏக்களை பிரித்து, தன் வசப்படுத்தி ஆட்சி அமைக்கலாம் என்று திமுகவும் திட்டமிட்டு வரும் வேளையில்,
இன்று காலை அப்பல்லோவில் நடைபெற்ற ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்தே விவாதிக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகிறது.
முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளி யிட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் அப்பல்லோ வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது,  ‘ஆட்சி மற்றும் கட்சியில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழல்களை எப்படி கையாள்வது என்பது குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முதல்வர் அதிமுக முக்கிய தலைவர்கள், தலைமை செயலாளர் உள்பட பலர் முதல்வரின் தோழியான சசிகலாவுடனும் சந்தித்து பேசி வருகிறார்கள்.
இன்று காலை கூடிய  சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டத்தில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஓபிஎஸ் சோகமாக காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டத்தில் பேசியதாவது,
கழக பொதுச்செயலாளர் அம்மா தற்போது இக்கட்டான நிலையில் இருப்பதால், இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்மை தேசிய கட்சிகள் கண்காணித்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி,  மத்திய அரசு உள்ளே நுழையப் பார்க்கிறது. அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது என்றும்,
உங்களுக்கு யாரேனும்,  தனிப்பட்ட முறையில் எந்தவித அழைப்பு வந்தாலும், உடனே தெரியப்படுத்துங்கள்’ என அறிவுரை வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.
மேலும், முதல்வருக்கு சிகிச்சை முடிவு தெரியும் வரையில் எம்.எல்.ஏக்கள் யாரும் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டாம்’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொள்ளாமலேயே டில்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் சென்னை வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விவாதித்தனர். அப்போதே இதுகுறித்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போதும், முதல்வர் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள  மத்திய அரசு காட்டும் வேகம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
‘முதல்வரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மத்திய அரசு அதிக முயற்சி செய்கிறது என்று சசிகலா நம்புவதாகவும் கூறப்படுகிறது.
அதன்காரணமாக, தற்போதைய சூழ்நிலையை காரணம் காட்டி, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களை வளைக்க மத்திய அரசு முனைப்பு காட்டினால்,  எம்.எல்.ஏக்களும் மாவட்ட நிர்வாகிகளும் இணங்கிவிடக் கூடாது என்றும், . ஓ.பி.எஸ் என்ன சொல்கிறாரோ அதன்படியே எம்.எல்.ஏக்கள் செயல்பட வேண்டும் என்றும் அனைத்து உறுப்பினர்களிடமும் உறுதிமொழி பெறப்பட்டதாகவும், கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமை கழக நிர்வாக கூறியதாக தகவல்கள் வந்துள்ளன.