டெல்லி: சீன விசா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம்மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

 கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தாா். அப்போது பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் அனல் மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தை வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான தல்வன்டி சாபோ மின்சார நிறுவனத்திடம் (டிஎஸ்பிஎல்) மாநில மின்சார வாரியம் அளித்தது. இதைத் தொடா்ந்து, சீனாவின் ஷான்டாங் மின்சார கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து அந்த மின் நிலையத்தை அமைக்கும் பணியில் டிஎஸ்பிஎல் ஈடுபட்டது.

இந்நிலையில், அனல் மின் நிலையப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஷான்டாங் நிறுவனம் சாா்பாக பணியாற்ற 263 சீனா்களுக்கு விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்திய விசா கிடைப்பதற்கு ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் வழிவகை செய்ததாகவும், இதற்காக அவா் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்நகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பாக அவர் அப்போது மத்தியஅமைச்சராக இருந்த தனது தந்தை ப.சிதம்பரத்திடம் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னா், விசா கிடைக்க டிஎஸ்பிஎல் சாா்பில் உதவிய கோரிய விகாஸ் மகாரியா என்பவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு  டெல்லி நீதிமன்ற சிபிஐ சிறப்பு நீதிபதி திக் வினய் சிங் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காா்த்தி சிதம்பரம் உள்பட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, சேதன் ஸ்ரீவாஸ்தவா என்பவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.

விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் – மே 30 வரை கைது செய்ய தடை!

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: ப.சிதம்பரம் சென்னை வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை…

சீன விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின்…

கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு: ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு

[youtube-feed feed=1]