டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக,  ஒருவாரம் பள்ளிகள் மூட உத்தரவிட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவால் மேலும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார்.

டெல்லியில்  காற்றுமாசு அதிகரித்து வருகிறது. காற்றுமாசைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் எடுத்து வருகிறார். இந்த நிலையில், பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்துள்ளதுடன்,, 4 நாளுக்கு கட்டுமானப் பணிக்கு அனுமதி இல்லை என அறிவித்து உள்ளார். மேலும், அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருவாரக் காலத்துக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைநகரில் காற்று மாசுபாடு அவசர நிலையை நெருங்கி வருவதால், திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடப்படும் என்றும் அரசு அலுவலகங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகள் அசுத்தமான காற்றை சுவாசிக்காமல் இருக்க திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடப்படும் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளதாகவும்,   “அரசு அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு 100% திறனில் வீட்டிலிருந்து (WFH) செயல்பட வேண்டும் என்றும். முடிந்தவரை WFH விருப்பத்திற்கு செல்ல தனியார் அலுவலகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

நவம்பர் 14 முதல் 17வரை கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாது என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், காற்று மாசு காரணமாக,  டெல்லி யில் பொதுமுடக்கம்  தொடர்பான திட்டத்தை மாநில அரசு செய்து வருவதாகவும், அதை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான பெஞ்ச்,  டெல்லியில் பூட்டுதலைக் கட்டுப்படுத்த பரிந்துரைத்தது. மேலும்  காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும், மக்கள் வீடுகளுக்குள் முகமூடி அணியும் அளவுக்கு மாசு நிலைமை மோசமாக உள்ளது  மத்திய மற்றும் டெல்லி அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

மேலும், வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு, பட்டாசு மற்றும் தூசி போன்ற மாசுபாட்டிற்கு வேறு காரணங்களும் உள்ளன என்றும், குப்பை களை எரிப்பது தீர்வாகாது என்றும் கூறியதுடன், தேசிய தலைநகரில் பள்ளிகள் திறக்கப்பட்டு, குழந்தைகள் கடுமையான மாசு நிலைமைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.