டெல்லி:

ஹிஜ்புல் முஜைகிதீன் பயங்கரவாதி சப்ஜர் பத் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் காஷ்மீரை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவ பணிக்கான எழுத்து தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு என்பது நாடு முழுவதும் நடக்கிறது. காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ராணுவத்தல் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஸ்ரீநகர் மற்றும் பட்டான் பகுதிகளில் இருந்து மட்டும் 815 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. இதில் 799 பேர் தற்போது நடந்த தேர்வு மையத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே நடந்த உடற்தகுதி மற்றும் மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் எழுத்து தேர்வை சந்தித்துள்ளனர். ஜூனியர் கமிஷன்டு அதிகாரிகள் மற்றும் இதற்கு இணையான பதவிகளுக்கு இந்திய ராணுவம் சார்பில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது’’ என்றார்.

ஹிஜ்புல் முஜாகிதீன் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ராணுவத்தினர் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை நிலைநாட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கெடுபிடி ஸ்ரீநகரில் உள்ள 7 காவல்நிலைய எல்லைகளில் கடைபிடிக்கப்படுகிறது.

கன்யார், நவ்கத்தா, சபகடல், எம்ஆர் குஞ்ச், ரெயினவாரி, க்ராய்குத், மைசுமா ஆகிய காவல் நிலைய எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வு பணிக்கு செல்லும் ஊழியர்களின் அடையாள அட்டையும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ராணுவம், போலீசாரால் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

நாளை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டுப்பாடு அன ந்த்நாக்ல புல்வாமால சோபியான் மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டுளளது. புத்காம், கண்டர்பால் ஆகிய மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.