சென்னை: தமிழக முதல்வர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வர், அரசை விமர்சித்து பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், அரசாணையை எதிர்த்தும் சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை கடந்த ஆண்டே சீமான் வாபஸ் பெற்றதால் தற்போது வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று சீமான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.