சென்னை: முதல்வர். திமுக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பெண்கள் உள்ளிட்டோர் குறித்து இழிவான கருத்துகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக ஆதரவாளரான பிரபல யுடியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்ட நிலையில், அவர்மீது காவல்துறை  குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

பா.ஜ.க ஆதரவாளரான யுடியூபஙர் கிஷோர் கே. சாமி முன்னாள் முதல்வர்கள் மற்றும் தற்போதைய தமிழக முதல்வரை அவதூறாகப் பேசி பதிவிட்டு வந்தார். மேலும், பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலர் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தார். இதுகுறித்து காவல்துறையில் ஏராளமான புகார்கள் குவிந்தன

‘இதைத்தொடர்ந்து. சங்கர் நகர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, அவர்மீதன பழைய வழக்குகள் தூசிதட்டி எடுக்கப்பட்டன.   2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாகப் பேசியதாக கொ‘டுக்கப்பட்ட புகாரிலும், அவர்மீது  4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். மேலும் மற்றொரு பத்திரிகையாளரை மத ரீதியில் சித்தரித்து தரக்குறைவாக விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரிலும் 2 பிரிவின்கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில்,   கிஷோர் கே. சாமி மீது இன்று குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.