சென்னை: அவதூறு பதிவு: நான் ராஜாகோபாலை ஏமாற்றிவிட்டு பிரான்சிஸ் சாந்தகுமாரை திருமணம் செய்துகொண்டதாக உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை  தடா ரஹீம் யுடியூபில் பதிவிட்டு, தனக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் மனு அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாட்டம் மேற்கு விரிவாக்கம் எல்.ஐ.சி.காலணியில் வசித்து வரும்,  தண்டபாணி என்பரின் மனைவி ஜீவஜோதி. இவர் பிரபல சவரண ஓட்டல் உரிமையாளரான மறைந்த ராஜகோபால் தொடர்பான சர்ச்சையில் சிக்கியவர். ஜீவஜோதி காதலரை கொன்றதாக ராஜகோபால் சிறைக்கு சென்ற நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் தடா ரஹீம் என்பவர் நடத்தி வரும்  யூடியூப் சேனலில்,  ஜீவஜோதி ராஜகோபால் தொடர்பான செய்தி வெளியானது.  ராஜகோபால் ஜீவாஜோதி வழக்கில் நடந்த உண்மை இதுதான் என்று தடா ரஹீம் என்பவரிடம் நேர்காணல் செய்து அந்த வீடியோ கடந்த பிப்ரவரி 18-ந் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது சர்ச்சையானது.

இதுதொடர்பாக தடா ரஹீம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜீவஜோதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது மனுவில்,  வழக்கிற்கு சிறிதளவும் சம்மந்தமே இல்லாத தடா ரஹீம், என்பவர், ராஜகோபால் சிறையில் இருந்தபோது அவருடன் இருந்த ஒரு காரணத்திற்காக என்னைப்பற்றி அவதூராக பேசியுள்ளார். தற்போது 3 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோவில்,  நான் ராஜாகோபாலை ஏமாற்றிவிட்டு பிரான்சிஸ் சாந்தகுமாரை திருமணம் செய்துகொண்டதாக உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை அவர் கூறியுள்ளார். மேலும் என்னைப்பற்றி ஆபாசமாகவும் கமெண்ட் செய்துள்ள இந்த வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட யூடியூப் நெறியாளர் தடா ரஹீம் மற்றும் சேனல் உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?  எ…டு….க்….கு….ம்…….