டாக்கா: இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த கவலை அளிப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெங்காய உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆனால், அண்மையில் கொட்டி தீர்த்த கனமழை எதிரொலியாக அதன் விளைச்சலில் வீழ்ச்சி காணப்பட்டது.

அதன் காரணமாக உள்நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட, மத்திய அரசானது வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதை தடை செய்தது.

இந் நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அண்டை நாடான வங்கதேசம் வருத்தம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமன் கூறியதாவது:

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தகவலை முன்பே கூறி இருக்கலாம். இந்த தடையை இந்தியா நீக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.