சென்னை,

மிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசை அறிவித்து உள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து  அரசாணையை தமிழ அரசு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

தீபாவளி பண்டிகை வருவதை யொட்டி, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும் கூறப்பட்டுள்ளது.

2015 போனஸ் சட்டத் திருத்தத்தின் படி 21 ஆயிரம் ரூபாய் வரை மாத ஊதியம் பெறுவோருக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.