சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஈரோட்டில் நாளை ஜெ.தீபா கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கிறார்.

 

 

காவிரி வாரியம் அமைக்கக் கோரி கடந்த பல நாட்களாக தினந்தோறும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் தீபா பேரவை சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தீபா தெரிவித்துள்ளார்.

அதில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்,  ஈரோடு ரயில் நிலையம் அருகில் நாளை காலை 11.00 மணி அளவில் நடக்கும். அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்” என்று தீபா குறிப்பிட்டுள்ளார்.

காவிரிக்காக தமிழகத்தில் போராட்டங்கள் வலுக்கத்துவங்கி நீண்ட நாட்களாகிவிட்டன. இதுவரை அது குறித்து கருத்து தெரிவிக்காத, தீபா, திடீரென போராட்டம் அறிவித்திருப்பது, “இப்போதுதான் விழித்தாரா தீபா” என்று அரசியல் மட்டத்தில் கேள்வியை எழுப்பியிருக்கிறது.