சென்னை: December என்றால் Danger தான் , என்று தனது மரணம் குறித்து ஏற்கனவே விஜயகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதுபோல என்னய்யா காசு, செத்தாக்கூட அருணா கொடியை அறுத்துட்டுதான் புதைப்பாங்க என்று பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னை மியாட்  மருத்துவனையில்  மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு (வயது 71)  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட வர்தா புயல் பாதிப்பை தொடர்ந்து, தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார். பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய விஜயகாந்த், டிசம்பர் மாதம் என்றாலே டேஞ்சர்தான் என்று  வர்தா புயல் பாதிப்பு குறித்து  பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

டிசம்பர் மாதத்தில் தான் இறந்துவிடுவோம் என்பதை விஜயகாந்த் முன்கூட்டியே கணித்துதான் அவ்வாறு பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

December என்றால் Danger தான் – விஜயகாந்த் வீடியோ:

வீடியோ உதவி: நன்றி தந்தி டிவி…

அதுபோல பணம் குறித்து விஜயகாந்த் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது. என்னயய்யா காசு காசு காசு.. செத்தாக்கூட அருணாக்கொடிய அத்துவிட்டுட்டுதான் உள்ள கொண்டு போய் பொதைக்கிறான்”  என்று அவர் பேசிய வீடியோ வைலாகி வருகிறது.