டெல்லி: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,49,507 கோடி என்றும், இந்து கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15சதவிகிதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 11வது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.4 கோடி ரூபாயினை கடந்து சாதனை கண்டுள்ளது.  2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1,49,507 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.  இது கடந்த ஆண்டை காட்டிலும் 15% அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பரில் மொத்தம் ₹1,49,507 கோடி ஜிஎஸ்டி வசூலில், ₹26,711 கோடி மத்திய ஜிஎஸ்டி, ₹33,357 கோடி மாநில ஜிஎஸ்டி, ₹78,434 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மீதமுள்ள ₹11,005 கோடி செஸ் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய நிதி அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிசம்பர் மாதம் மொத்தம் ஜிஎஸ்டி வரி வருவாயானது 1,49,507 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் மத்திய அரசின் சரக்கு சேவை வரி (CGST) வருவாயாக 26,711 கோடி ரூபாயும், இதே மாநில அரசுகளின் சரக்கு சேவை வரி (SGST) வருவாயாக 33,357 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மொத்தம் மத்திய மாநில அரசுகளின் வரி விகிதம் சேர்த்து, 78,434 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது . அதில், செஸ் வரி வருவாயாக 11,005 கோடி ரூபாயாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதே கடந்த ஏப்ரல் 2022 தொடங்கி டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டினை காட்டிலும் ஜிஎஸ்டி வசூலானது அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூலானது வரலாறு காணாத அளவுக்கு, 1.68 லட்சம் கோடி ரூபாயினை எட்டியிருந்தது. அதன் பிறகு அந்த லெவலை எட்டவில்லை என்றாலும், தொடர்ந்து முந்தைய ஆண்டினை காட்டிலும் அதிகளவிலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் மத்திய அரசு 36,669 கோடி ரூபாயினை CGST-க்கும், 31,094 கோடி ரூபாயினை SGST-க்கும் பகிர்ந்து அளித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதத்தில் 7.9 கோடி இவே பில்கள் உருவாக்கப்பட்டது. இது 2022 அக்டோபரில் 7.6 கோடி இவே பில்கள் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.