கெஜ்ரிவாலிடம் பணம் வாங்காமலே வாதாடப்போகிறேன்! ஜெத்மலானி

Must read

டில்லி,

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் பணம் வாங்காமலேயே அவருக்காக வாதாடிப் போகிறேன் என்றும், அவர் ஏழையான முதல்வர் என்றும் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் மீது மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இதில் கெஜ்ரிவாலுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். வழக்கு தற்போது குறுக்குவிசாரணை நிலையில் உள்ளது.

இதுவரை ஆஜராகி வாதிட்டதற்கு கட்டணமாக 3 கோடியே 42 லட்ச ரூபாய் தரவேண்டும் என ஜெத்மலானி கெஜ்ரிவாலுக்கு பில் அனுப்பியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர் கட்டணத்தை டில்லி அரசின் நிதியிலிருந்து செலுத்தும் விதமாக கோப்புகள் தயாரிக்கப்பட்டது. இதை பாரதியஜனதா கட்சியினர்  விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இதன் காரணமாக, வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, கெஜ்ரிவாலை தமது ஏழை கட்சிக்காரர் என நினைத்து கட்டணம் வசூலிக்கப்போவதில்லை என்று கூறி உள்ளார்.

மேலும், தான் வசதிபடைத்தவர்களிடம் மட்டுமே தாம் கட்டணம் வசூலிப்பதாகவும், ஏழைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை என்றும்,

தமது குறுக்கு விசாரணைக்குப் பயந்தே, மத்திய நிதியமைச்சர் இத்தகைய பிரச்சனைகளை கிளப்பி விடுவதாகவும் ராம்ஜெத்மலானி குற்றம்சாட்டியுள்ளார்.

டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது இந்த சர்ச்சை.

More articles

Latest article