தேனி

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மரணமடைந்த வர்களின்  எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம போடி அருகே உள்ள குரங்கிணி  கொழுக்குமலை வனப்பகுதியில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள், காட்டுத்தீயில் சிக்கினர். 39 பேர்கள் குழுவாக சென்ற நிலையில், 9 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயரிழந்த நிலையிலும், 30 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர்.

இவர்களில் 15க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன்  பேர் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை, அப்போலோ, மீனாட்சி மிஷன், கிரேஸ் கென்னட் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.  மேலும் பலர் சென்னை , கோவை, ஈரோடு  கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் சிகிச்சை பலனளிக்காமல்  தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் சிகிச்சை பலனின்றி கோவை தனியார் மருத்துவமனையில்  உயிரிழந்தார். இதன் காரணமாக காட்டுத்தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இவரை மதுரையில் இருந்து  ஆம்புலன்ஸ் விமானம் மூலம்  கோவை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.