சென்னை

ம்பத்தூர் காவல்துறையினர் எச் ராஜாவை ஏன் மனநலப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிந்ததாக செய்திகள் வெளியாகின.    அவர் அதை மறுத்ததுடன்  அதை தாம் பதியவில்லை எனவும் தமது இணைய தள அட்மின் அதை பதிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.    அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் எச் ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும் அவரைக் கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.   காவல் துறை தனது புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அம்பத்தூர் போலிசார் ஏன் எச் ராஜாவை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என வினவி உள்ளது.   மேலும் இந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அம்பத்தூர் போலீசார் வரும் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.