மதிய உணவில் செத்தஎலி, குழந்தைகள் வாந்தி பேதி: டெல்லியில் பரபரப்பு

Must read

டெல்லி:

டெல்லியில் அரசு பள்ளியில்  எலி  செத்துக்கிடந்த  உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தியோலி பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில்  பள்ளிக்குழந்தைகள் நேற்றுமதியம்  உணவுசாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களில் 9  குழந்தைகளுக்கு திடீரென  வாந்தி  மயக்கம் ஏற்பட்டது.  இதையடுத்து அந்தக்குழந்தைகள் மருத்துவமனைக்கு உடனே கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை  அளிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர், இதில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அந்தப்பள்ளிக்கு மதிய உணவு அளித்து வருவதாகவும், அதன் தலைவராக இருக்கும் குன்வார் பால் சிங், ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏ அஜய் தத்தின் மாமனார் என்பது தெரியவந்த்.

இதையடுத்து இச்சம்பவத்தைக் கண்டித்து பாஜகவினர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரவால் இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு இடங்களில் அரவிந்த் கெஜ்ரவலுக்கு எதிராக பாஜகவினர் தொடர் போராட்டம் நடத்தினர்.

அப்போது டெல்லி அரசு பள்ளிகளின் நிலை படுமோசமாக நிலையில் இருப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் முழக்கங்கள் எழுப்ப பட்டன

More articles

Latest article