டெல்லி:

றந்தவரின் உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என்று எய்ம்ஸ் மருத்துவமனை  விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு 109 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை, உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். அந்த அளவுக்கு கொரோனா மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர் தொட்டாலே கொரோனா பரவி விடும் என்ற சூழலில் பல நாடுகளில், இறந்தவர்களி உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ கூட யாரும் முன்வருவதில்லை.

இந்த  நிலையில் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் இருக்கும் அச்சத்தை போக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா, “இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா பரவாது; தும்மல், இருமல் போன்றவற்றால் தான் கரோனா பரவும். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  அடக்கம் செய்யப்பட்டால் கல்லறையின் மேற்பரப்பு சிமென்ட் செய்யப்பட வேண்டும்” என்று டாக்டர் எய்ம்ஸில் தடயவியல் மருத்துவத்தின் தலைவர் சுதிர் குப்தா தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து  எந்தவொரு தவறான தகவலும் பரவாமல் இருக்க சுகாதார அமைச்சும் வழிகாட்டுதல்களைத்  தெரிவித்து வருகிறது,  இது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான் என்றும் விளக்கம் அளித்தார்.

கொரோனா உயிரிழப்புகள் குறித்து  மக்களிடையே பீதியும் பயமும் இருக்கக்கூடாது, இறந்தவரைக் கையாளும் போது சரியான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். எனவே, இறந்த உடலில் இருந்து நோய் பரவாது என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.