ஆக்லாந்து:

நியூசிலாந்து – இங்கிலாந்து இடையேயான பகல் இரவு போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டின் அதிரடி பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 58 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அங்கு இரு அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, ஆக்லாந்தில் முதல்போட்டி, டே நைட் போட்டியாக இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்த அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.

அதைத்தொடர்ந்து களமிறிங்கிய இங்கிலாந்து அணியினர் நியூசிலாந்து அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

நியூசிலாந்து பந்து வீச்சாளர்களான  டிரென்ட் போல்ட், சவுத்தி ஆகியோரின் அதிரடி பந்துவீச்சில் இங்கிலாந்து அணி நிலை குலைந்து  27 ரன்னில் அந்த அணி 9 விக்கெட்டை இழந்தது.

9வது வீரராக களமிறங்கிய ஓவர்டன் மட்டுமே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய நிலையில்,  20.4 ஓவர்களில் 58 ரன்னில் இங்கிலாந்து அணி சுருண்டது.

கிரேக் ஓவர்டன் 25 பந்தில் 33 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த போட்டியின்போது,  இங்கிலாந்து அணியை சேர்ந்த  5 வீரர்கள் ‘டக்’ அவுட் ஆனார்கள்.

மேலும்,  கேப்டன் ஜோரூட், பென்ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் மட்டுமே  32 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்த நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜீத்ராய் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

தற்போது வரை அந்த அணியின் ஸ்கோர் 37 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளனர்.

கேப்டன் கனே வில்லியம்சன் 59 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.