ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அனிருத்தின் பிறந்தநாள்.அன்று ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டேர் மற்றும் பி.ஜி.எம் இசை வருகின்ற நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 7-ம் தேதி நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.