மும்பை

தினமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 பெண்கள் காணாமல் போவதாகச் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தான்வே குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சியான  சிவசேனா கட்சியின் (உத்தவ் பிரிவு) மூத்த தலைவரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை மேலாவைத் தலைவருமான அம்பாதாஸ் தான்வே துணை முதல்வர் (உள்துறை) தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர்,

”கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் மகாராஷ்டிராவில் சிறுமிகள் உட்பட 5,510 பெண்கள் காணாமல் போய் உள்ளனர். இது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தினமும் சராசரியாக 70 பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவும் இடம்பெற்றுள்ளது. ஆகவே, மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.”

எனக் குறிப்பிட்டுள்ளார். Maharashtra,  Opposition leader,  Daily, 70 women, missing,