கொல்கத்தா:

ஃபனி புயல் காரணமாக சனிக்கிழமை வரை கொல்கத்தா விமான நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


ஃபனி புயல் கஜா புயலை விட வலுவானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் 10 ஆயிரம் கிராமங்கள் மற்றும் 52 நகரங்கள் இந்த புயலால் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.

ஃபனி புயல் வெள்ளியன்று பூரியை கரை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல், ஃபனி புயல் காரணமாக வெள்ளிக் கிழமை காலை 9.30 முதல் மே 4-ம் தேதி வரை கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்தார்.

மேலும், புவனேஸ்வரத்துக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மேலும், கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள கொல்கத்தா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் புயல் பாதிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

1999-ம் ஆண்டு ஒடிசாவில் தாக்கிய புயலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதைவிட, ஃபனி புயல் சக்தி வாய்ந்தது என்று கூட்டு புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஃபனி புயலின் வேகம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.