ரெஸ்டாரன்ட், சிறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி.யை குறைக்க வேண்டும்!! 5 மாநில நிதியமைச்சர்கள் முடிவு

Must read

டில்லி:

ஐந்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ரெஸ்டாரன்ட்கள், சிறு வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், திண்பண்டங்களுக்கு ஜிஎஸ்டி.யை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

அஸ்ஸாம் நிதிமைச்சர் ஹேமந்தா பிஸ்வா சர்மா, பிகார் நிதியமைச்சர் சுஷில் மோடி, ஜம்மு காஷ்மீர் நிதியமைச்சர் ஹாசிப் திரபு, பஞ்சாப் நிதியமைச்சர் மான்ப்ரீத் பாதல், சத்தீஸ்கர் நிதியமைச்சர் அமர் அகர்வால் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனியாக செயல்படும் ரெஸ்டாரன்ட்களுக்கு ஒரே சீராக 12 சதவீத வரி வதிக்க வேண்டும். குளிர்சாதனம் வசதி உள்ள மற்றும் இந்த வசதி இல்லாமல் ஓட்டல்களுக்கு உள்ளேயே செயல்படும் ரெஸ்டாரன்ட்களுக்கு ஒரே சீராக 18 சதவீத வரி விதிக்க வேண்டும். தற்போது பொதுவாகவே ரெஸ்டாரன்ட் செல்லும் நடுத்தர ம க்கள் 18 சதவீத வரி செலுத்துகின்றனர்.

அதேபோல் ரூ. 20 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் மேற்கொள்ளும் வணிகர்கள், உற்பத்தியாளர்களுக்கு ஒரே சீரான வரி விதிப்பு மேற்கொள்ள வேண்டும். வரி ஆவண தாக்கலின் போது சலுகைகள் கொடுக்க வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. எனினும் இந்த ஆலோசனைகள் மீது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்.

More articles

Latest article