சென்னை:  முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளை ​நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  விசாரித்து வரும் நிலையில், அவர் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், இந்த வழக்குகள் அனைத்தும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் வந்தள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி நீதிபதி ஜெயச்சந்திரனிடமே மற்ற வழக்குகளும் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர், பொன்முடி உள்பட முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான  சொத்து குவிப்பு வழக்குகளை  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு ஆய்வுக்கு எடுத்து விசாரணை நடத்தி வந்தார்.  இந்த நிலையில், அவர் சுழற்சி முறையில் இன்றுமுதல்  ம்துரை கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் விசாரித்து வந்த வழக்கள் யார் விசாரணை நடத்துவார்எ ன்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,   இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை விடுவித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. ஆனாலும், வழக்கை சூமோட்டோவாக மறு ஆய்வுக்கு எடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி காட்டினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவையும், அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு வசதி வாரிய வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவையும் நீதிபதி மறுஆய்வுக்கு எடுத்ததார். வழக்குகளின் விசாரணை மிக மோசமான முறையில் கையாளப்பட்டதாகவும், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தி போல நடந்துகொண்டதாகவும் நீதிபதி வெங்கடேஷ விமர்சித்தார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு (2023)  அக்டோபர் – டிசம்பர் வரை 3 மாதங்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அமைச்சர்களுக்கு எதிரான மறுஆய்வு வழக்கின் விசாரணை கேள்விக்குறியானது. ஆனால், மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு டிசம்பரில் வந்த ஆனந்தவெங்கடேஷ்  கிடப்பில் போடப்பட்ட வழக்குகளை எடுத்து, மீண்டும் விசாரணைகளை தொடங்கினார்.  இதனையடுத்து, வழக்குகளின் விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மறுஆய்வு வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 15 முதல் 19 தேதிகள் வரை நடைபெறும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சுழற்றி முறையில் இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும், இன்று (ஏப்ரல் 1) தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான்  முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வழக்குகளையும் விசாரிக்கிறார்.  இது திமுக, அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியையே உண்டாக்கியுள்ளது.

நீதிபதி ஜெயச்சந்திரன், எற்கனவே  கடந்த 2001ஆம் ஆண்டு பொன்முடிக்கு எதிராக பதியப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை விழுப்புரம் நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்து பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளால், பதவி இழந்த அமைச்சர் பொன்முடி, மீண்டும் பதவியை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரனிடமே மீண்டும் அனைத்து வழக்குகளும் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.