சென்னை :

காவிரி உண்ணாவிரதப் போராட்டத்தில் மத்திய அரசை கண்டிக்காமல் திமுக.வை விமர்சனம் செய்ததன் மூலம் அதிமுக.வின் துரோகம் வெளிப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறுகையில், ‘‘துரோகத்திற்கு துணை போன அ.தி.மு.க.வின் உண்மை முகம் உண்ணாவிரதத்தில் வெளிப்பட்டது. மத்திய அரசை கண்டிக்காமல், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை அ.தி.மு.க. விமர்சித்தது கீழ்த்தரமான அரசியல். தங்களின் துரோகத்தையும், இயலாமையையும் மறைக்கவே உண்ணாவிரதம் இருந்தனர்.

மக்கள் மன்றத்தின் முன் முகத்திரை கிழிந்து அவமானத்திற்கு ஆளாகி உள்ளனர். நாடாளுமன்றத்தில் தங்களுக்கு உள்ள பலத்தை மக்களுக்கு பயன்படுத்தாமல் பா.ஜ.வுக்கு அதிமுக துணை போகிறது’’ என்றார்.