மாநாட்டுக்கு வைகை எக்ஸ்பிரசில் கமல், ஸ்ரீப்ரியா மர்றும் பலர்

டிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், திருச்சியில் நடைபெறும் தனது கட்சி மாநாட்டுக்காக ரயிலில் இன்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, ரயில் பயணத்தின் இடியல் பல ஊர்களில் மக்களை சந்திக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதனால் கூட்டம் கூடி, மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்று பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் உட்பட மூவர், தென்னக ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

இதையடுத்து ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுக்கவே, தனது ரயில் பிரச்சாரத் திட்டத்தை கமல் ரத்து செய்தார். சாதாரணமாக இன்று பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, மக்களுடன் தான் ஒன்று கலப்பதை தடுக்க அரசியல் நடப்பதாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

“நான் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக படு பிசியாக இருந்த காலகட்டம்.1990 என்று நினைக்கிறேன். அபூர்வ சகோதரர்கள் படத்தின் வெற்றிவிழா.வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. படத்தில் வந்த அதே குள்ள வேடத்தில் மேடையில் தோன்றிய கமலஹாசன் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் விருது பெற்றார். வெளியே கமல் ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல், அடிதடி, ரகளை.

இரு நிகழ்வையும் என் கேமராவில் படம் பிடித்தேன். இரண்டு நாட்கள் கழித்து எல்டாம்ஸ் ரோடு அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்து குள்ளக்கமல் கருணாநிதியிடம் விருது பெறும் படத்தை காண்பித்தேன். “இதை எனக்கு தருவீர்களா?” என்றார் ஆர்வத்துடன். “எடுத்துக் கொள்ளுங்கள்.”அது 8/6 b/w போட்டோ. கூடவே news photo story ஒன்றை news time ல் பதிவிட்டிருந்தேன்.இது ஈ நாடு குருப்பிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில பத்திரிகையாகும். அதில் கமல் ரசிகர்கள்- போலீஸ் அடிதடி செய்தியும் வெளியாகி இருந்தது.

சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு

அதைப் பார்த்து அதிர்ந்தார் கமல். “இதெல்லாம் எனக்கு தெரியாதே” என்றார். வேறெந்த பத்திரிகையிலும் அது வெளியாகியிருக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.

நான் அந்த நிகழ்விற்கு அன்று சற்றே காலதாமதமாக சென்றதால் இந்த அடிதடியை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த நாளே கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தது. கமல் அதை மிக சீரியஸ்சாக எடுத்து கொண்டார் என நினைக்கிறேன்.

நடந்த பிறகு அதிர்ந்தோ, வருந்தியோ என்னபயன்? ரயில் நிலையங்களில் ரசிகர்கள் சந்திப்பு அசம்பாவிதம் ஆகும் என்பதால்தான் நாம் ரயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்து தடுத்தோம். ஆனால், மக்களோடு நான் கலப்பதை அரசியலாக்குகிறார்கள் என கோபப்பட்டுளார். எப்போதும் விமானத்திலேயே பறக்கும் கமலுக்கு ரயில் நிலைய பரபரப்பும்,நெரிசல்களும் தெரியாததால் கோபப்பட்டுள்ளார் என்றே எண்ணுகிறேன்.மக்களோடு கலக்க விரும்பியது நன்று.ஆனால் அதற்கான இடத் தேர்வில் கவனம் வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.