சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்துள்ள பரங்கிபேட்டை அகரத்தில் சுடுகாடு அருகே இன்று, காலை ஆறுமுகம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருக்கு வயது நாற்பது. சமையல் தொழிலாளி.
கொலையாளியை பிடிக்க மோப்பநாய் உதவியுடன் பரங்கிபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடைபெறுகிறது.