சென்னை:
சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமாரின் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
qq
இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையீட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பிறகு நீதிபதிகள், “மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் தான் குற்றவாளி என முடிவெடுத்தது எப்படி” என்று கேள்வி எழுப்பினார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு வரும் முன்பே ராம்குமார் புகைப்படமும், வாக்குமூலமும் ஊடகங்களில் வெளியானது குறித்தும் குற்றவியல் நடைமுறைகளை அப்பட்டமாக மீறியது குறித்தும் அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
குற்றம் நிரூபிக்கப்படும் முன்பே, புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானால், அது விசாரணையை பாதிக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நிகழ்வுகளை வருங்காலங்களில் தவிர்க்க வேண்டும் என்று  அறிவுறுத்தினார்கள்.