சென்னை:
சுவாதியை வெட்டி கொன்ற  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் கோபிநாத் நேரில் விசாரணை நடத்தினார். அவரை  வரும் 18 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்  உத்தரவிட்டார்.
கடந்த மாதம் கடைசி வாரத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்தது யார் என்ற மர்மம் நீடித்த நிலையில் காவல்துறையினர் நெல்லை மாவட்டத்தில் வீட்டில் பதுங்கி இருந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.
அந்த நேரத்தில் அவன் கழுத்தை தானே அறுத்து கொண்டதால்  காவல்துறையினர் அவரை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சென்னையில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டடார்.

ராம்குமார்
ராம்குமார்

இன்று காலை முதல்  ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முறைப்படி அவர்  நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும்.  ஆனால் ராம்குமார்  சிகிச்சையில் இருப்பதால் எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். ராம்குமாரை  நீதிமன்ற காவலில் வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து  ராம்குமார்,  உடல் நலம் தேறியவுடன் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
இதற்கிடையில் ராம்குமாரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அரசு தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும்.
ராம்குமார் உடல்நிலை நலமாக இருப்பதாகவும், அவர்  பேசக்கூடிய அளவில் தகுதி உடையவராக இருப்பதாகவும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நசீர் அகம்மது தெரிவித்தார்.