கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு

Must read

கடலூர்:
ண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமி கும்பிடுவது ◌தொடர்பாக இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு.
தற்போது இக்கோயிலை ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து கொ ண்டு காந்திநகரை சேர்ந்த் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் தாமரைச்செல்வன் காந்திநகர் மக்களுடன் சேர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரை சந்தித்து மனு கொடுத்தார்.
இப்பிரச்னையில் காவல்துறை தலையிட்டு இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படாதவாறு சுமூக தீர்வு காண வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

More articles

Latest article