மும்பை: பீகார் உத்தரப்பிரதேசத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குங்கள் என்று கட்கரிக்கு சிவசேனா பதிலடி தந்துள்ளது.

லாக்டவுன் காலத்தில் 7 முதல் 8 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு திரும்பிச் சென்றனர்.

இந்த தருணத்தில், மும்பை மற்றும் புனே போன்ற ஸ்மார்ட் நகரங்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உருவாக்கப்பட்டால், மக்கள் அடர்த்தி இயல்பாகவே குறைந்துவிடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி இருந்தார்.

இது தொடர்பாக, சிவசேனா பல முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது. அக்கட்சி கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக பசி நிலவுகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. மக்கள் ஆபத்தை கையில் எடுக்கத் தயாராக உள்ளனர், வேலை தேடி பயணிக்கின்றனர்.

மத்திய அரசானது ஜூன் 2015ல் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணியைத் தொடங்கியது, ஆனால் உண்மையில் இத்தனை ஆண்டுகளில் இது எவ்வளவு செயல்பட்டது? மத்திய அரசின் வருவாய்க்கு மும்பை கணிசமான பங்களிப்பு செய்துள்ளது.

ஆனால் இந்த தொற்றுநோய்க்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து உரிய நிதி உதவியைப் பெறவில்லை. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் மும்பை மற்றும் புனே போன்ற ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கினால், மும்பை மற்றும் புனேவின் மக்கள் அடர்த்தி இயற்கையாகவே குறைந்துவிடும். முதலில் அந்த மாநிலங்களில் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

லாக்டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 1.50 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு சொந்த மாநிலங்களில் எந்த வேலையும் இல்லை. இதன் பின்னணியில் வளர்ச்சியை எட்டவில்லை என்று கூறி உள்ளது.