அரியலூர்: அரியலூர் மாவட்டம்  விரகாலூரில்  இன்று காலை நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் அருகே விரகாலூரில் நாட்டு வெடி  தயாரிக்கப்படும் ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.  அந்த பகுதியில் உள்ள வயல் பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததும், எதிர்பாராத விதமாக இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், பெண் ஒருவர் உடல் சிதறி உயரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், ஆலையின் உள்பே பலர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில்,  3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால், மீட்பு பணியுல் தொய்வு ஏற்பட்டள்ளதுடன், அந்த பகுதியில்  பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த பட்டாசு விபத்தில் பலியான பெண்ணின்  உடல் மட்டும் சுமார் 200 அடி தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து காணப்பட்டது. 3 நபர்கள் தீ காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் இந்த தீ விபத்தால் அதிர்ச்சியில் உள்ளதால் அவரால் பேச இயலவில்லை என்று கூறப்படுகிறது.