சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், இன்றைய பேரவை நிகழ்வுகளை ஆஸ்திரேலிய சபாநாயகர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும், வழக்கமான நடைமுறைகள் முடிந்ததும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இன்றைய பேரவை நிகழ்வுகளை, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர்  மில்டன் டிக் உள்பட 14 பேர் கொண்டு முக்கிய பிரமுகர்கள் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

முன்னதாக, சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட வந்துள்ள ஆஸ்திரேலிய சபாநாயகர் மில்டன் டிக் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களின் சார்பில் வரவேற்பு அளிப்பதாக சபாநாயகர் அப்பாவு  தெரிவித்தார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிடக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.