சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.  கூட்டம்தொடர் தொடங்கியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

முன்னதாக சபாநாயகர் அப்பாவுவுடன், அதிமுக சட்டமன்ற துணைத்தலைவர்  இருக்கை தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார். இந்த தொடரில், பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக் கோரி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்து.

பரபரப்பான அரசியல் சூழலில் இக்நு தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய  அமர்வு தொடங்கியதும். பேரவை தலைவர் அப்பாவு மறைந்த தலைவர்களுக்காக இரங்கல் தீர்மானம் வாசித்தார். மறைந்த எம்எஸ் சுவாமிநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் லியாவுதீ சேட், பழனியம்மாள் ஆண்டமுத்து, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

மேலும், காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம். தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன் மொழிய உள்ளார் .

அத்துடன், தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்கங்கள், சாதிய பாகுபாடு,  சட்டம் ஒழுங்கு நிலவரம், காவிரி விவகாரம், ஆசிரியர் போராட்டம்-காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பு. பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக் கோரி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

முன்னதாக  எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக  சபாநாயகர்  அப்பாவு உடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார்.  எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்,.