பத்மபூஷன் விருதை ஏற்கப்போவதில்லை – புத்ததேப் பட்டாச்சார்யா அறிவிப்பு

Must read

மேற்கு வங்கம்:
த்மபூஷன் விருதை ஏற்கப்போவதில்லை என்று புத்ததேப் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார். 

மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார். அவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் விருது வேண்டாம் என சொல்லியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர் 2000 முதல் 2011 வரை மேற்கு வங்காள மாநில முதல்வராக பதவி வகித்தார்.

பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பதம் பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா, சோனு நிகாம் உள்ளிட்ட மொத்தம் 107 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு. இதில் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சவுகார் ஜானகி என தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது.

More articles

Latest article