டெல்லி: மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனையில் ரூ,.325ம், தனியார் மருத்துவமனையில் ரூ.800 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
உலகில் முதன்முதலாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் உருவாக்கியுள்ளது. இதை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸாக போடப்படும். இதன் மூலம் மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகியுள்ளது.
இந்த நிலையில், அரசு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கான விலை பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, தனியார் மருத்துவமனையில் ரூ.800-க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.325-க்கும் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை பெற கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும், இந்த Incovacc மருந்து ஜனவரி 4வது வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]