கான்பூர்: வரும் செப்டம்பர்-அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும், இது தவிர்க்க முடியாது  என ஐஐடி கான்பூர் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் 2வது அலை  கணிசமாகக் குறைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலையின் தாக்கம் சற்றே ஓய்வு வரும் நிலையில், கொரோனா 3வது அலையின் தாக்கம் குறித்த விவாதங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்த ஐஐடி கான்பூர் பேசிராரியர்கள் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வர்மா ஆகியோர், ஆய்வு முடிவுகளை செய்தியாளர்களை வெளியிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது,.

நாட்டில் மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாதது. தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா இரண்டாம் அலை சில வடகிழக்கு மாநிலங்களில் (மிசோரம், மணிப்பூர், சிக்கிம்) தவிர மற்ற மாநிலத்திலும் கணிசமாகக் குறைந்துவிட்டது. பெரும்பாலும் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் கேரளா, கோவா, சிக்கிம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் இன்னும் 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன. தொற்று பரவலில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்வது அவசியமானது.

கொரோனாவின் 3வது அலை விரைவில் பரவும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க முடியாது.  இந்தாண்டு செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை உச்சம்பெறும். இது மருத்துவ வல்லுநர்களிடையேயும் மக்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நாங்கள் கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக ஆய்வுகள் செய்தபோது, கொரோனா மூன்றாவது அலையின் அளவுகள் குறித்தும் அதன் சாத்தியக் கூறுகள் குறித்து கண்டறிந்தோம். அதன்படி,  மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாதது இருந்தாலும் சில சமயங்களில் கொரோனா 2வது  அலையை விட குறைவான வீரியத்தில் காணப்படவும் சாத்தியம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.