கொச்சி:
ந்தியாவின் மிக மலிவான வென்டிலேட்டரை ஜூலை இறுதியில் இருந்து தயாரிக்க ஆரம்பிக்கிறது கேரளாவின் KSDP நிறுவனம்.
தற்போது கேரள அரசின் KSDP நிறுவனம், இந்தியாவின் மிக மலிவான அவசர வென்டிலேட்டரின் வணிக உற்பத்திக்கு தயாராகி வருகிறது. கேரள மாநிலத்தின் KSDP மருந்து நிறுவனம் தயாரித்த இந்த வென்டிலேட்டர்களுக்கு ரூபாய் 7,500 முதல் 8000 வரை மட்டுமே செலவு செய்யப்படுகிறது.
கேரளாவின் KSDP தயாரித்த இந்த போர்ட்டபிள் வென்டிலேட்டர், கலிகட்டை சேர்ந்த NIT நிறுவனம் உருவாக்கிய வென்டிலேட்டரின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மிகக் குறைந்த விலை விலை வென்டிலேட்டர் இதுவே….. இதற்கு ரூபாய் 15,000 மட்டுமே செலவாகிறது.
ஜூலை இறுதியில் இருந்து இந்த வெண்டிலட்டர் களின் தயாரிப்பு துவங்கி விடும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் KSDP மருந்து நிறுவனம் முன்னதாகவே ஒரு வென்டிலேட்டர் உற்பத்தி ஆலையை அமைத்திருக்கிறது, இது ஒரு மாதத்தில் 200 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
KSDP- யின்  தலைவர் திரு.சிஎம். சந்திரபாபு கூறியுள்ளதாவது: கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் வென்டிலேட்டர்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால்,  இந்த வென்டிலேட்டர் கள் தயாரிப்பதற்கு ஒப்புதலும் தாமதமாக வர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
இந்த வென்டிலேட்டர் கள் தயாரிப்பதற்கான செலவை கூட எங்களால் எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்துள்ளோம் ஏனென்றால் இதற்காக ஒரே ஒரு பொருள் மட்டும் தான் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, அதைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களுமே உள்நாட்டு பொருட்கள் என்பதால் இதனுடைய செலவும் குறைகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் நிறுவனமான KSDP பொதுவாக மருந்துகளை மட்டுமே தயாரித்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது கேரள அரசின் ஆணைக்கிணங்க நாங்கள் மருத்துவ பொருட்களையும் மார்ச் மாதத்திலிருந்து தயாரித்து வருகிறோம் என்றும் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.