டில்லி:

‘‘சாமியார் வழக்கில் 4 கோடி பக்தர்களை நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை’’ என்று பாஜ எம்.பி. தெரிவித்துள்ளார்

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என நீதிமன்றம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. இவர் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் இவருக்கு ஆதரவாக பாஜ மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்தார். இதை தொடர்ந்து பாஜ எம்பி சக்ஷி மகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,‘‘நீதிமன்றம் பாதித்தவர்களை மட்டுமே பார்த்துள்ளது. ராம் ரஹீம் சிங் பின்னால் இருக்கும் 4 கோடி பக்தர்களை கணக்கில் கொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் இது தொடர்பாக கூறுகையில்,‘‘பஞ்ச்குலா பகுதியில் ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு நீதிமன்றம் தான் பொறுப்பு’’ என்றார்.