திண்டுக்கல்: நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும், ஜாமினில் உள்ள அமலாக்கத்துறை  அதிகாரி அங்கித்திவாரி  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அரசு மருத்துவமனை மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், 3 மாத சிறைக்கு பிறகு, தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி,  அங்கித்திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் மேலும் யாரையும் சந்திக்கக்கூடாது.

இந்த நிலையில், தனது நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரி  உயர்நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான  ஏப்ரல் 12ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில், ஜாமின்கோரி,  அங்கித்திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கத.