வேலூர்: தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறிய  பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார் .  மேலும் தி.மு.க-வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை என கூறியதுடன் திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழகத்தின் திமுக இன்னும் பழைய அரசியல், சிந்தனையுடன் உள்ளது. திமுக ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. குடும்ப அரசியல், ஊழல், தமிழ் கலாசாரத்தை எதிர்க்கும் சிந்தனையுடன் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது திமுக. ஊழலுக்கான முதல் காப்புரிமையை திமுக வைத்துள்ளது. கொள்ளையடிப்பது மட்டுமே திமுக குடும்பத்தின் வேலை. மணல் கொள்ளை மூலம் மட்டுமே ஒரு ஆண்டில் ரூ. 4,200 கோடி ஊழல் செய்துள்ளது என்றார்.

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். அந்த வகையில், இதுவரை 6 முறை தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, நேற்று   7-வது முறையாக தமிழகம் வந்தார். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூா்), கே.பாலு (அரக்கோணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமாா் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி  இன்று (புதன்கிழமை)  காலை வேலூா் கோட்டை மைதானத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக, சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் வந்தடைந்தார். வேலூர் பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணி, அரக்கோணம் வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை அஸ்வத்தாமனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

மேடைக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு குனிந்து தலைவணங்கி வணக்கம் செலுத்தினார். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார் பிரதமர் மோடி. தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி வணக்கம் சொன்னார் பிரதமர் மோடி.மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்மும் முருகன் சிலை,   செங்கோல் உள்பட பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியும் பிரதமருக்கு பொன்னாடை கொடுத்து வரவேற்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய  வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி உலக நாடுகளின் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார் இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்திய போர் தளவாடங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி என்று கூறியதுடன், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், படேல் ஆகியோர் ஒன்று சேர்ந்த தலைவர்தான் பிரதமர் மோடி, தேசப்பிதா, ஜகத்குரு, உலக நாயகன் பிரதமர் மோடிக்கு புகழாரம் ஆட்டியதுடன்,  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசியவர்,  தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறிய  பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார் .  வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு வளர்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கும் என்றவர், முழு நாடும் தமிழின் பெருமையை அறிய வேண்டும் என்பதே எனது முயற்சியாக உள்ளது/ முருகன் பெருமானை நான் வணங்குகிறேன் என்றார். தமிழ்நாட்டின் வளர்சிக்காக எனது அனைத்து திறமையையும் பயன்படுத்துவேன் என்றார்,.

உதான் திட்டத்தின் கீழ் விரைவில் வேலூர் விமான நிலைய திட்டங்கள் முடிக்கப்பட்டு இந்தியாவின் முக்கிய விமான நிலையமாக உருவாகும்.

தமிழகத்தின் திமுக இன்னும் பழைய அரசியல், சிந்தனையுடன் உள்ளது. திமுக ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. குடும்ப அரசியல், ஊழல், தமிழ் கலாசாரத்தை எதிர்க்கும் சிந்தனையுடன் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது திமுக. ஊழலுக்கான முதல் காப்புரிமையை திமுக வைத்துள்ளது. கொள்ளையடிப்பது மட்டுமே திமுக குடும்பத்தின் வேலை. மணல் கொள்ளை மூலம் மட்டுமே ஒரு ஆண்டில் ரூ. 4,200 கோடி ஊழல் செய்துள்ளது என்றார்.

தமிழகத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. பள்ளிக் கூடங்களில் போதைப் பொருள்கள் விற்கப்படுகிறது. போதைப் பொருள் கள்ளக் கடத்தல் செய்யப்பட்டு என்சிபியால் கைது செய்யப்பட்ட தலைவன் திமுகவின் பாதுகாப்பிலும், அவர்கள் குடும்பத்துடன் தொடர்பிலும் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை மொழி, சாதி, மதத்தின் பெயரில் பிரித்து ஆழ்ந்து வருகின்றனர். திமுகவின் மோசமான அரசியலை அம்பலப்படுத்துவேன் என்றவர்,.

இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது என்றவர், நம்முடைய தமிழ் உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி, நான் பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியபோது திமுக அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மக்களை மொழியால், மதத்தால், சாதியால், பிரித்தாளும் வேலையை தி.மு.க செய்கிறது. தி.மு.கவின் செயல்களை மக்கள் உணரும்போது அந்த கட்சி செல்லாக்காசாகி விடும்  என்ற பிரதமர், தி.மு.க என்பது குடும்ப நிறுவனத்தைப் போன்றது. தி.மு.கவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழக கலாச்சாரத்திற்கு  எதிராக தி.மு.க செயல்படுகிறது என்றார்.

மேலும், கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸூம் தி.மு.கவும்தான். கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழக மீனவரக்ள் 5 பேரை இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன் என்று சுட்டிக்காட்டிய மோடி, தற்போது, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும்போது திமுக, காங்கிரஸ் கண்ணீர் வடிக்கிறது.  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இலங்கையில் இருந்து உயிரோடு மீட்டுக்கொண்டு வந்தேன் என்று கூறினார்.

மறைந்த அம்மா ஜெயலலிதாவை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினர் என்பதே நீங்களே அறிவீர்கள் என்று கூறிய மோடி, இண்டி கூட்டணிக்கட்சியினர் பெண் சக்திக்கு எதிராக பேசி வருவதாகவும், திமுக, காங்கிரஸ் சனாதனத்தை அழிப்பதை பற்றி பேசி வருகிறார்கள். *

திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் அயோத்தி ராமர் கோவிலை புறக்கணிக்கிறார்கள் என்றவர்,.  நான் உங்கள் அனைவரையும் காசிக்கு அழைக்கிறேன் என்றதுடன்,  குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு அழைக்கிறேன்.  நான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, வேலூர் அருகே உள்ள தங்க கோவிலுக்கு வந்திருக்கிறேன்.

வேலூர் மண் மீண்டும் ஒரு புரட்சி படைக்கப்போகிறது. இந்த கூட்டத்தை டெல்லி ஆச்சரியமுடன் பார்க்கிறது. கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு நாடு என்ன நிலையில் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரசின் கடந்த கால ஆட்சியில் மோசடி,ஊழல் என்று தான் செய்தி வரும் . ஆங்கியேர்களுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டது வேலூர். அந்த நகர மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

ஏப்ரல் 19ந்தேதி நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், மோடியின் கேரண்டியை உறுதி செய்யும் என்றார். வளமான இந்தியாக்கு பாஜக அடித்தளமிட்டுள்ளது. விண்வெளி துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் திறமை வளர்ந்து வரும் இந்தியாவுக்கு வலு சேர்க்கும். இந்தியா வல்லரசாக மாறி வருகிறது என தெரிவித்த பிரதமர், பாஜக வேட்பாளர்களை வெற்றிபெற செய்தால் தமிழ்நாடு முன்னேறும் என நான் கேரண்டி கொடுக்கிறேன், அயோத்தி ராமர் வேடத்தில் ஒரு சிறுவன் எனக்கு கைகாட்டுவதை நான் பார்க்கிறேன். பெரியோர்களே, எனக்கு ஆசி வழங்குவதற்காக, எனக்கு ஆதரவு தருவதற்காக வந்துள்ள இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம். பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார்.