ஸ்ரீஹரிகோட்டா,

ஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை ஏவும் பணியின் கவுண்ட் டவுனை இன்று தொடக்கி உள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உள்ளதன் மூலம் இஸ்ரோ, தனது 100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி வரலாறு படைக்க தயாராகி வருகிறது.

நாளை காலை 6.33 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட் டவுன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.23 மணிக்கு தொடங்கியது.

இஸ்ரோ விஞ்ஞானிகள்,

”என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள், மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும்,  ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது”

என்று கூறியுள்ளனர்.