ஸ்ரீஹரிகோட்டா

ந்திராயன் 2 விண்கலம் நாளை காலை 2.51 மணிக்கு ஏவப்பட உள்ளதால் அதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 6.15 மணிக்கு தொடங்கியது.

அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகள் நிலவின் பரப்பில் இதுவரை 38 முறை விண்கலன்களை தரையிறக்கம் செய்ய முயன்றுள்ளன. அவற்றில் பாதி முறை இந்நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. அதிக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. இந்திய விண்கலமான சந்திராயன் 1 கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவில் தரையிறக்கப்பட்டது.

சுமார் 11 ஆண்டுகள் கழிந்து தற்போது சந்திராயன் 2 விண்ணில் நாளை செலுத்தப்பட உள்ளது.   சந்திராயன் 2 விண்கலம்ம் 2379 கிலோ மொத்த எடை உள்ளதாகும். இதில் 1471 கிலோ எடை கொண்ட லேண்டர் பகுதி நிலவின் தரையில் இறங்கும் இந்த ஏண்டர் சுமார் 500 மீட்டர் வரை நகர்ந்து ஆய்வு நடத்தும்.

இதில் அதி நவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்ப ஆய்வு கருவிக்ள், லேசர் மூலம் இயங்கும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மெட்ரோ ரிப்ளக்டர் கருவியை சந்திராயன் 2 வில் இந்தியா எடுத்துச் செல்ல உள்ளது.

இந்த திட்டத்தின் வெற்றி மூலம் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல உள்ளது. அத்துடன் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் முயற்சிக்கும் இந்த திட்ட வெற்றி பெரிதும் பயன் தரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை காலை 2.51 மணிக்கு சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்ப்ட் உள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 6.15 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று காண உள்ளார். ஏற்கனவே முன்னாள் குடிய்ர்சு தலைவர்க்ள் அப்துல்கலாம் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோர் விண்கலம் ஏவப்படும் நிகழ்வை நேரில் கண்டுள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த ஏவுகணை ஏவப்படுவதை ஆந்திர ஆளுநர் நரசிம்மன். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் காண உள்ளனர். அத்துடன் பொதுமக்களுக்கும் நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இஸ்ரோ இணைய தளத்தில் இந்நிக்ழ்வு நேரடியாக ஒளிபரப்ப படுகிறது.